Connect with us

Raj News Tamil

“என் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பாதீங்க” – ராகவா லாரன்ஸ்

சினிமா

“என் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பாதீங்க” – ராகவா லாரன்ஸ்

நடன இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல்வேறு முகங்களை தற்போது தன்னுள் வைத்திருப்பவர் ராகவா லாரன்ஸ்.

இவர் திரைத்துறை மட்டுமின்றி, அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன்மூலம், பல்வேறு ஏழை எளியோருக்கு தன்னால் முயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனிமேல் தனது அறக்கட்டளைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிக்கிறேன். போதுமான பணம் எனக்கு கிடைக்கிறது. அதுவே, அறக்கட்டளைக்கு போதுமானது.

இதை நான் ஆணவமாக கூறவில்லை. யாருக்காவது உதவி செய்ய நீங்கள் நினைத்தால், உங்கள் வீட்டின் அருகில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவுங்கள் என்று தெரிவித்தார்.

More in சினிமா

To Top