Connect with us

Raj News Tamil

தரமான லைன் அப் வைத்திருக்கும் ராகவா லாரன்ஸ்!

சினிமா

தரமான லைன் அப் வைத்திருக்கும் ராகவா லாரன்ஸ்!

சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார். இந்த படத்தில், இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாக, ரஜினி உட்பட பலர் பாராட்டியிருந்தனர்.

இதன் விளைவாக, நடிகர் ராகவா லாரன்ஸ்-க்கு, பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதாவது, ரஜினியின் தலைவர் 171 திரைப்படம், ரத்தினகுமார் இயக்கும் அடுத்த திரைப்படம், அயலான் இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் அடுத்த திரைப்படம், அயோத்தி இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படம், விஜயின் தளபதி 68 திரைப்படம் என்று தொடர்ச்சியாக பெரிய படைப்புகளிலும், சிறந்த இயக்குநர்ளுடனும், ராகவா லாரன்ஸ் பணியாற்ற உள்ளார்.

இந்த படங்கள் திட்டமிட்டதைப் போல தொடர்ந்து வெற்றி பெற்றால், ராகவா லாரன்ஸ் முன்னணி இயக்குநராக உயர்வார் என்பது உறுதி..

More in சினிமா

To Top