Connect with us

Raj News Tamil

சூரறைப்போற்று இயக்குநருக்கு என்ன ஆச்சு? நெட்டிசன்கள் ஷாக்!

சினிமா

சூரறைப்போற்று இயக்குநருக்கு என்ன ஆச்சு? நெட்டிசன்கள் ஷாக்!

துரோகி, இறுதிச்சுற்று, சூரறைப்போற்று ஆகிய படங்களை இயக்கியவர் சுதா கொங்காரா. இவர் தற்போது சூரறைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை, நடிகர் அக்ஷய் குமாரை வைத்து எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குநர் சுதா கொங்காராவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள இயக்குநர், இன்னும் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ஏற்பட்டுள்ள காயத்தை புகைப்படமாக எடுத்து, அந்த பதிவில் அவர் இணைத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், விரைவில் குணமடைவீர்கள் என்று ஆறுதலாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top