Connect with us

Raj News Tamil

கூட்டத்தில் கையை பிடித்த ரசிகர்! தமன்னாவின் செயல்..! குவியும் பாராட்டு!

சினிமா

கூட்டத்தில் கையை பிடித்த ரசிகர்! தமன்னாவின் செயல்..! குவியும் பாராட்டு!

நடிகை தமன்னா, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ப்பதற்காக, பொது இடத்திற்கு சமீபத்தில் வந்துள்ளார். அப்போது, அவரை காண்பதற்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது.

ஆனால், அங்கிருந்த பவுன்சர்கள், தமன்னாவை பாதுகாப்போடு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். பவுன்சர்களையும் மீறி தமன்னாவிடம் சென்ற ரசிகர் ஒருவர், அவரது கையை பிடித்து, செல்பி எடுக்க முயன்றார்.

இதனை கண்ட பவுன்சர்கள், அந்த நபரை பிடித்து கீழே தள்ளிவிட்டனர். இதனால், அவர்களிடம் கோபம் கொண்ட தமன்னா, அந்த ரசிகரை அருகில் அழைத்து, செல்பி எடுத்துக் கொண்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

More in சினிமா

To Top