Connect with us

Raj News Tamil

தமிழக அமைச்சா்களுக்கு தமிழக கலாசாரம் பற்றி தெரியவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்!

அரசியல்

தமிழக அமைச்சா்களுக்கு தமிழக கலாசாரம் பற்றி தெரியவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழக அமைச்சா்களுக்கு தமிழக கலாசாரம் பற்றி தெரியவில்லை என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் குற்றம்சாட்டினார்.

சென்னை தியாகராய நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆகாசவாணி சென்னையின் ஜி20 நிகழ்ச்சிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவது நமது நாட்டுக்கு மிகப்பெரிய பெருமை. ஜி20 மாநாட்டின் தலைமை இந்தியாவுக்கு சுழற்சி முறையில் கிடைக்கவில்லை; நாட்டின் வளா்ச்சி மற்றும் பிரதமா் மோடியில் ஆளுமையை பார்த்து இந்த முறை மாநாட்டின் தலைமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

உலக நாடுகளுக்கு இருக்கும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அனைவரும் இந்தியாவை நோக்கி வருகின்றனா். தமிழகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல பிரதமா் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

தமிழகத்தின் அடையாளமான செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாடு மையத்தின் முகப்பில் தமிழகத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் நடராஜா் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சா்களுக்கு தமிழக கலாசாரம் பற்றி தெரியவில்லை என்றார் அவா்.

More in அரசியல்

To Top