Connect with us

Raj News Tamil

தளபதி 68 படம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்.. படுதோல்வி இயக்குநருடன் கூட்டணி!

சினிமா

தளபதி 68 படம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்.. படுதோல்வி இயக்குநருடன் கூட்டணி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில், விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், தளபதி விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தளபதி 68 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித்தை வைத்து, மங்காத்தா என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தார். எனவே, அவர் விஜயுடன் கூட்டணி வைப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆனால், இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளதால், ரசிகர்கள் சிலர், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top