Connect with us

Raj News Tamil

விஜய் படத்தின் டைட்டில் இதுதான்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சினிமா

விஜய் படத்தின் டைட்டில் இதுதான்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில், தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், விஜய் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு, The Greatest Of All Time என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, GOAT என்று சுருக்கமாக அப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top