Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தனி ஒருவன் 2-ஆம் பாகத்தின் முக்கிய அப்டேட்!

சினிமா

தனி ஒருவன் 2-ஆம் பாகத்தின் முக்கிய அப்டேட்!

தொடர் தோல்விகளை கொடுத்து வந்த இயக்குநர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும், எப்படியாவது பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

அந்த சமயத்தில், அண்ணன்-தம்பி இருவரும் இணைந்து, தனி ஒருவன் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு, ஜெயம் ரவியும் சரி, மோகன் ராஜாவும் சரி, சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நல்ல படங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து, தனி ஒருவன் 2-ஆம் பாகத்தை எடுக்க உள்ளார்களாம். இந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வரும் ஆகஸ்டு 28-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளதாம்.

8 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வெற்றியை பதிவு செய்த இந்த கூட்டணி, மீண்டும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..,

More in சினிமா

To Top