Connect with us
Raj News Tamil

Raj News Tamil

லியோ படமே இன்னும் வரல… அதுக்குள்ள விஜய்68 கோடிகளில் விற்பனை..!

சினிமா

லியோ படமே இன்னும் வரல… அதுக்குள்ள விஜய்68 கோடிகளில் விற்பனை..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்சங்கர் இசையில் நடிகர் விஜய்யின் 68வது படம் உருவாகவுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு விஜய், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. அதாவது, 2003ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தின் பாடலை மட்டும் யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் விஜய்68ன் பாடல் மற்றும் பின்னணி இசை என அனைத்தையும் தன் வசம் வைத்துள்ளார் யுவன்ஷங்கர்ராஜா. தற்போது இந்த படத்தின் இசை உரிமையின் விற்பனை பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதாவது பெயர் கூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இப்படத்தின் இசை உரிமை 25கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், வெங்கட் பிரபு, யுவன்ஷங்கர்ராஜா கூட்டணி என்பதாலேயே இப்படத்தின் விற்பனை இப்போதே தொடங்கிவிட்டது என்று சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top