Connect with us

Raj News Tamil

சிகிச்சைக்கு வந்த முதியவர்: குப்பையில் வீசிய அரசு மருத்துவமனை ஊழியர்கள்!

தமிழகம்

சிகிச்சைக்கு வந்த முதியவர்: குப்பையில் வீசிய அரசு மருத்துவமனை ஊழியர்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அவருக்கு உள்நோயாளி வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் அவரை காண்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் முதியவரை வார்டில் இருந்து அழைத்து வந்து அவரை வீல் சேரில் வைத்து கொண்டு வந்து அரசு மருத்துவமனை பிணவறை காம்பவுண்ட் சுவர் வெளிப்பகுதியில் உள்ள சாலையில் குப்பைக்குள் குப்பையாக தூக்கி வீசி சென்றுள்ளனர்.

இதனால் அந்த முதியவர் உயிருக்கு போராடிய நிலையில் ஈக்கள் மொய்க்க மழையில் நனைந்தபடியும் நாய்கள் அவரைச் சுற்றி குறைத்துக் கொண்டிருந்தது.

மேலும் அந்த நபரின் மீது மருத்துவமனை கழிவு பொருட்கள் கொட்டப்பட்டன.

இதனால் இந்த ஆதரவற்ற முதியவரை யாரும் காப்பாற்ற வரவில்லை இதைப் பார்த்த சக நோயாளிகள் இப்படியும் நடக்குமா? தாராபுரம் அரசு மருத்துவமனையில் என்ன நிர்வாகம் நடத்துகிறார்கள் உயிருடன் உள்ள ஒரு மனிதனை இவ்வளவு கேவலமாக நடத்துகிறார்களே என ஆதங்கப்பட்டனர்.

More in தமிழகம்

To Top