Connect with us

Raj News Tamil

விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா?

சினிமா

விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா?

அஜித், த்ரிஷா ஆகியோர் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், புதியதாக உருவாகி வரும் திரைப்படம், விடாமுயற்சி.

இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி, 5 மாதங்களுக்கு பிறகு, ஒருவழியாக தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படப்பிடிப்பில், நடிகை த்ரிஷாவும், கலந்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தன்னுடைய ரோடு என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், என்னால் முதல் நாள் காட்சியை பார்க்க முடியவில்லை என்றும், நான் ஷீட்டிங்கிற்காக வெளியே வந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தி ரோடு திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top