Connect with us

Raj News Tamil

உதயநிதி அரசியல் கத்துக்குட்டி; நாவடக்கம் தேவை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகம்

உதயநிதி அரசியல் கத்துக்குட்டி; நாவடக்கம் தேவை: எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், “அதிமுக மாநாடு ஆகஸ்ட் மாதம் மதுரையே குலுங்கும் அளவுக்கு நடந்து முடிந்தது. எதிரிகள் அஞ்சுகின்ற அளவுக்கு நடந்த மதுரை மாநாட்டை பற்றி, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியிருக்கிறார். உதயநிதி சொன்னதில் இருந்து திமுகவின் சேலம் மாநாடு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவை விமர்சிக்கும்போதே உங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அரசியல் கத்துக்குட்டியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை.

More in தமிழகம்

To Top