Connect with us

Raj News Tamil

வாடிவாசல் முக்கிய அப்டேட்! வெற்றிமாறனின் அடுத்த Move!

சினிமா

வாடிவாசல் முக்கிய அப்டேட்! வெற்றிமாறனின் அடுத்த Move!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், விடுதலை 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு, வாடிவாசல் படத்தில் இணைவதற்கு, வெற்றிமாறன் முடிவு செய்திருந்தார். ஆனால், விடுதலை 2-ஆம் பாகத்தின் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், வாடிவாசல் படத்தின் பணிகள் தொடங்கப்படாமலே இருந்தது.

இதனால், படம் டிராப் ஆகிவிட்டது என்றும் சில தகவல்கள் உலா வந்தது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணியை, வெற்றிமாறன் முடித்துவிட்டதாகவும், நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் அவர் இறங்கியிருப்பதாகவும், கூறப்படுகிறது. இதனை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top