Connect with us

Raj News Tamil

எட்டி உதைத்த ஹீரோ.. தூரமாக விழுந்த கார்.. ட்ரோல் செய்யப்படும் பிரபல மாஸ் நடிகரின் படம்..

சினிமா

எட்டி உதைத்த ஹீரோ.. தூரமாக விழுந்த கார்.. ட்ரோல் செய்யப்படும் பிரபல மாஸ் நடிகரின் படம்..

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியாகியுள்ளது. இதேபோன்று, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா என்ற படமும், பாலகிருஷ்ணாவின், வீரசிம்மா ரெட்டி என்ற படமும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தை பார்த்துள்ள தமிழ் ரசிகர்கள் சிலர், படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு காட்சியில், பாலகிருஷ்ணா காரை எட்டி உதைக்கிறார். கார் கொஞ்சதூரம் தள்ளி சென்று விழுகிறது.

இதற்கு திரையரங்கிலும் ஆரவாரம் செய்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது. மேலும், பொங்கல் வின்னர், துணிவும் கிடையாது, வாரிசும் கிடையாது, எங்கள் பாலகிருஷ்ணா தான் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top