Connect with us

இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…!!

சினிமா

இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற அக்டோபர் 19-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் அளித்த பேட்டியில், “லியோ படம் நன்றாக வந்துள்ளது. தம்பி விஜய்யும் படத்தை பார்த்துள்ளான். பார்த்து விட்டு நன்றாக உள்ளது என்று பாராட்டியுள்ளான். படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து விஜய்யை ஒருமையில் பேசியதற்காக அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் மிஷ்கின் மரணம் அடைந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தளபதியை அவன், இவன் என்று பேசுவதா? அப்படி சொல்லி கூப்பிடும் லெவலில் அவர் இல்லை என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தளபதி வருங்கால முதல்-அமைச்சர். அதனால் பொது இடத்தில் மரியதை கொடுத்து பேசுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

More in சினிமா

To Top