Connect with us

Raj News Tamil

அஜித்திடம் செல்போனில் பேசிய விஜய்! காரணம் என்ன?

சினிமா

அஜித்திடம் செல்போனில் பேசிய விஜய்! காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் முக்கியமான இரண்டு நடிகர்கள் என்றால், அது அஜித்-விஜய் தான். இவர்கள் இரண்டு பேரின் திரைப்படங்கள் வெளியானால், அன்று திரையரங்குகள் திருவிழா கோலத்தில் தான் இருக்கும்.

இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே, சினிமாவில் போட்டி இருந்தாலும், இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். இருவரும், தங்களது நல்ல காரியங்களிலும், கெட்ட காரியங்களிலும், பங்கெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய், அஜித்திடம் செல்போனில் பேசியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்றால், அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மருத்துவமனைக்கு சென்று, முழு உடல் பரிசோதனை செய்திருந்தார்.

அப்போது, அவரது காதுக்கு கீழே லேசான வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்து, அந்த வீக்கத்தை, மருத்துவர்கள் சரி செய்தனர்.

அதன்பிறகு, அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக செல்போனில் அழைப்பு விடுத்த விஜய், அஜித்தின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

More in சினிமா

To Top