Connect with us

Raj News Tamil

வெங்கட் பிரபு படத்திற்கு விஜய் சம்பளம்! வாயடைத்துப் போன தென்னிந்திய நடிகர்கள்! எப்போது டாப் தளபதி தான்?

சினிமா

வெங்கட் பிரபு படத்திற்கு விஜய் சம்பளம்! வாயடைத்துப் போன தென்னிந்திய நடிகர்கள்! எப்போது டாப் தளபதி தான்?

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்றால், அது விஜய் என்று தான் சொல்ல வேண்டும். படம் சுமாராக இருந்தாலும், தனது ஓபனிங் மூலமாகவும், ரசிகர்கள் மூலமாகவும், குறிப்பிடத்தகுந்த வசூலையாவது பெற்றுவிடுகிறார்.

இவ்வாறு இருக்க, விஜய் தற்போது லியோ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியான பிறகு, விஜயின் சம்பளம் வேற லெவலில் எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த படத்திற்கான விஜய் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு, 150 கோடி ரூபாய் விஜய் சம்பளமாக வாங்க உள்ளாராம். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபராக விஜய் மாறிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top