Connect with us

Raj News Tamil

சலார் திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கியவர் யார்?

சினிமா

சலார் திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கியவர் யார்?

கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் திரைப்படம் சலார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கியவர் யார்? என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கிய ராஜமௌலி இப்படத்தின் முதல் டிக்கெட்டை படக்குழுவிடமிருந்து பெற்று கொண்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை, படக்குழு தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

More in சினிமா

To Top