Connect with us

Raj News Tamil

கட்டையை பிளக்கும் ஆதிரா ! வைரலாகும் காணொளி !

Trending

கட்டையை பிளக்கும் ஆதிரா ! வைரலாகும் காணொளி !

பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்களுக்கு மகனாக பிறந்தவர் நடிகர் சஞ்சய் தத். இவர் 1981- ஆம் ஆண்டு வெளியான ராக்கி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார். பாலிவுட்டில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் ,முக்கிய கதாநாயகர்களுக்கு டப்பிங் செய்தும் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.

இறுதியாக , பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளி வந்த கே ஜி எப் – 2வில் இவர் நடித்திருந்த வில்லனான ஆதிரா கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .மேலும் , லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கத்தில் வெளிவர உள்ள லியோ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து , நடிகர் சஞ்சய் தத் சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் அவர் பெரும் ஆக்கிரோஷத்துடன் மரக்கட்டை ஒன்றை பிளப்பதாக தெரியவருகிறது. இதில் அவர் கூறியதாவது மரக்கட்டையை பிளப்பது உடலின் மேல் பகுதிக்கு மிகவும் வலு சேர்க்க கூடிய ஒரு உடற்பயிற்சியாகும் . இதை அனைவரும் ,முயற்சி செய்யுமாறு பதிவிட்டுள்ளார்.

இப்பதிவானதை , சமூகவலைதளங்களில் ஆதிரா கம் பேக் என்ற ஹாஸ்டாக்கின் மூலம் சஞ்சய் தத் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top