Connect with us

Raj News Tamil

பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் 3 பேர் காயம்..!!

தமிழகம்

பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் 3 பேர் காயம்..!!

கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தாய் மற்றும் பாட்டியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதையடுத்து புஷ்பராஜ் செல்போனை பாக்கெட்டில் இருந்து தூக்கி வீச முயற்சித்த போது இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தால் வாகனத்தில் சென்ற புஷ்பராஜ், அவரது தாய் மற்றும் பாட்டி மூவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் மூவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top