Connect with us

Raj News Tamil

தொடர்ச்சியாக மாஸ் இயக்குநர்களுடன் கைக்கோர்க்கும் எஸ்.கே! மொத்த பட்ஜெட் ரூ.900 கோடி!

சினிமா

தொடர்ச்சியாக மாஸ் இயக்குநர்களுடன் கைக்கோர்க்கும் எஸ்.கே! மொத்த பட்ஜெட் ரூ.900 கோடி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவ்வாறு இருக்க, இவரது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்க, பல்வேறு முன்னணி இயக்குநர்களின் படங்களில், சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.

அதாவது, அயலான் திரைப்படம் 100 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு, தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம், 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம்.

இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளதாம். இதையடுத்து, வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு, 150 கோடி ரூபாய் பட்ஜெட் என்று கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, இந்தியிலும் களமிறங்க உள்ள சிவகார்த்திகேயன், 200 கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

இவ்வாறு தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க உள்ளார். இந்த படங்களின் ஒட்டுமொத்த பட்ஜெட், 900 கோடி ரூபாய் என்ற கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தகவல், எஸ்.கே. -வின் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top