5 வயது சிறுவனுக்கு நிற்காத இருமல் – எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்..!

அமெரிக்காவில் 5 வயது சிறுவன் 3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து பராகுவேயில் உள்ள மருத்துவர்கள் சிறுவனை எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அதில் சிறுவனின் இடது நுரையீரலில் ஸ்பிரிங் போன்ற உலோக பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

நுரையீரலில் ஸ்பிரிங் சிக்கிக் கொண்ட பிறகு இடைவிடாத இருமல் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இடது நுரையீரலில் இருந்து ஸ்பிரிங் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் இடது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை நாளடைவில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.