பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.
இதையடுத்து பேசிய அண்ணாமலை சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரபேல் வாட்ச்சை நான் வாங்கினேன். வீட்டு வாடகை, ஊழியர்கள், சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள் என அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஊழலை குறித்து பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என தெரிவித்துள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியல் வீடியோ என வெளியிட்டு மக்களை திசை திருப்ப பாஜக முயற்சி செய்கிறது. நீரவ் மோடி முதல் அதானி வரை பலருக்கும் துணை போகும் கட்சி பாஜக என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.