Connect with us

Raj News Tamil

இந்த இயக்குநருடன் கூட்டணியா? வேண்டாம் என்று கதறும் அஜித் ரசிகர்கள்!

சினிமா

இந்த இயக்குநருடன் கூட்டணியா? வேண்டாம் என்று கதறும் அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, அஜித் யாருடன் கூட்டணி வைக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

அதாவது, தன்னுடைய ஆஸ்தான இயக்குநரான சிறுத்தை சிவாவுடன் தான், அஜித் கூட்டணி வைக்க உள்ளாராம்.

இந்த கூட்டணி, இதுவரை, பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது. இருப்பினும், இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பதை அவரது பெரும்பாலான ரசிகர்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top