Connect with us

Raj News Tamil

அஜித்தை வறுத்தெடுத்த நடிகர் போஸ் வெங்கட்! அதிரடி பதிவு!

சினிமா

அஜித்தை வறுத்தெடுத்த நடிகர் போஸ் வெங்கட்! அதிரடி பதிவு!

மிக்ஜாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில், நடிகர் விஷ்னு விஷால் மற்றும் அமீர் கான் ஆகியோர் சிக்கியிருந்தனர்.

இதனை அறிந்த நடிகர் அஜித், தன்னுடைய சொந்த செலவில், படகு ஒன்றை ஏற்பாடு செய்து, அவர்களை அங்கிருந்து காப்பாற்றினார்.

இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட், ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உங்கள் படத்தை டிக்கெட் எடுத்து பார்க்க வரும் ஏழை ரசிகனுக்காகவும், நீங்கள் ஒரு படகை தயார் செய்திருக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு, இங்குள்ள அனைத்து வடநாட்டவர்களையும் காக்கிறது என்றும், தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More in சினிமா

To Top