Connect with us

Raj News Tamil

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை காண மும்பை சென்ற நடிகர் ரஜினிகாந்த்!

விளையாட்டு

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை காண மும்பை சென்ற நடிகர் ரஜினிகாந்த்!

கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை 2023 போட்டியானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை 2023 பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள இந்திய அணியை 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி இன்று நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது.

இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா இதுவரை 2 முறை வெற்றிபெற்று கோப்பையை வென்றுள்ள நிலையில், நியூசிலாந்து அணியோ 2 முறை இரண்டாம் இடத்தைப் பிடித்து கோப்பையை தவறவிட்டுள்ளது. இதனால் போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை சென்றார். அப்போது, படப்பிடிப்பிற்காக செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை காண செல்கிறேன் என்று அவர் கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in விளையாட்டு

To Top