Connect with us

Raj News Tamil

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..!

தமிழகம்

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு செல்லும் நடிகர் ரஜினிகாந்த்..!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் மூலவர் பிரதிஷ்டை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விழாவிற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக-வை சேர்ந்த அர்ஜுனமூர்த்தி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

விழாவில் பங்கேற்பதற்காக ஜனவரி 21ம் தேதியே அயோத்தி புறப்படும் ரஜினிகாந்த் அதற்கு மறுநாள் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

More in தமிழகம்

To Top