Connect with us

Raj News Tamil

ப்ளாக் பஸ்டர் படத்தின் 2-ஆம் பாகத்தில் அதிதி ஷங்கர்! ஜாக்பாட் தான்?

சினிமா

ப்ளாக் பஸ்டர் படத்தின் 2-ஆம் பாகத்தில் அதிதி ஷங்கர்! ஜாக்பாட் தான்?

கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். அதாவது, ராம்குமார் இயக்கத்தில், விஷ்னு விஷால் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முண்டாசுப்பட்டி. இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு, ராட்சசன் படத்தின் மூலம், இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.

அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, தனுஷின் கால் ஷீட்டுக்காக, இயக்குநர் ராம்குமார் காத்திருந்தார். ஆனால், பல்வேறு படங்களில் கமிட்டான தனுஷ், ராம்குமாரை டீலில் விட்டார்.

இதனால் கடுப்பான ராம்குமார், தனது ஆஸ்தான நடிகரான விஷ்னு விஷாலிடம் கதையை சொல்லி, அவரை ஓகே செய்துவிட்டார். இந்த படம், முண்டாசுப்பட்டியின் 2-ஆம் பாகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தான், நடிகை அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top