Connect with us

Raj News Tamil

அதிமுகவுக்கு செல்லும் அ.ம.மு.க.நிர்வாகிகள்…டி.டி.வி. தினகரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அரசியல்

அதிமுகவுக்கு செல்லும் அ.ம.மு.க.நிர்வாகிகள்…டி.டி.வி. தினகரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அ.ம.மு.க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

அ.ம.மு.க. மாநில இளைஞரணி செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ந்தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதனை தொடர்ந்து அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும், மதுரை மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்த கே.கே.உமாதேவனும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அ.ம.மு.க. மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணனும் ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மனுமான மா.சேகரும் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க. முக்கிய நிர்வாகியுமான திருச்சி ஆர்.மனோகரன், இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். அ.ம.மு.க நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருவதால் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிருப்தியில் உள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top