Connect with us

Raj News Tamil

அட்லி அடுத்த ஹீரோ இவரா? அஜித்தும் இல்ல.. விஜயும் இல்லையா?

சினிமா

அட்லி அடுத்த ஹீரோ இவரா? அஜித்தும் இல்ல.. விஜயும் இல்லையா?

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு பிறகு, தெறி, மெர்சல், பிகில் ஆகிய ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்தார்.

அதன்பிறகு, பாலிவுட்டிற்கு சென்ற அட்லி, ஷாருக்கானை வைத்து, ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் தற்போது பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன்பிறகு, இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்று, பலரும் பெரும் ஆர்வத்தில் இருந்து வந்தனர். ஒருசிலர் அஜித்துடன் கூட்டணி வைப்பார்? என்றும், ஒருசிலர் மீண்டும் விஜயுடனே கூட்டணி வைப்பார்? என்றும் கூறி வந்தனர்.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை தான், அட்லி இயக்க உள்ளாராம்.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்த பிறகு, இந்த கூட்டணி இணையும் என்றும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top