Connect with us

Raj News Tamil

அட்லீயின் அடுத்த டார்கெட் இந்த ஹீரோ தான்..!

சினிமா

அட்லீயின் அடுத்த டார்கெட் இந்த ஹீரோ தான்..!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் திரைப்படமும் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இவரது அடுத்த படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. தமிழ், ஹிந்தி க்கு பிறகு தெலுங்கு பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி உள்ளாராம் இயக்குனர் அட்லீ. அதாவது நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘புஷ்பா 2’ படத்தை முடித்துவிட்டு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் அட்லீயின் படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. தமிழ், ஹிந்தியில் வெற்றி கண்ட அட்லீ, தெலுங்கில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More in சினிமா

To Top