Connect with us

Raj News Tamil

அயலான் திரைப்படத்தின் டீஸர் தேதி அறிவிப்பு..!

சினிமா

அயலான் திரைப்படத்தின் டீஸர் தேதி அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், தொழில்நுட்ப பணிகளின் காரணமாக, இன்னும் முடிவடையாமல் இருந்து வருகிறது. இப்படம் வரும் 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது படத்தின் டீசர் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் இடம்பெறும் ஏலியனோடு, இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இருப்பது போன்ற போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top