Connect with us

Raj News Tamil

பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவோம்: மாயாவதி!

அரசியல்

பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவோம்: மாயாவதி!

மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பகுஜன் கட்சி தனித்து போட்டியிடுவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பகுஜன் கட்சி தனித்தே களம் காணும். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இண்டியா’ கூட்டணி உட்பட எந்த அணியிலும் இணைய மாட்டோம்.

ஹரியாணா, பஞ்சாப் உட்பட சில மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது.தன்னைப் போன்ற சாதிய, முதலாளித்துவம் உள்ளிட்ட ஒத்த எண்ணங்களைக் கொண்ட 26 கட்சிகளுடன் இணைந்து மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என காங்கிரஸ் கனவு காண்கிறது.

காங்கிரஸ் மற்றும் பாஜகவின் சாதி வெறி, ஏழைகளுக்கு எதிரான போக்கு, முதலாளித்துவ மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாகவே இண்டியா மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணிகளில் இணையாமல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது.

அவர்களின் கொள்கைகள் அனைத்தும் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரான தாகவே உள்ளது. காங்கிரஸின் ‘‘ஏழ்மையை அகற்றுவோம்’’ பாஜகவின் ‘‘ஏழைகளின் வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சம் டெபாசிட்’’ ஆகிய நிறைவேறாத வாக்குறுதிகளே அந்த கூட்டணிகளை விட்டு பகுஜன் சமாஜ் இன்றளவும் விலகியிருப்பதற்கு முக்கிய சான்றுகளாக உள்ளன. இவ்வாறு பகுஜன் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

More in அரசியல்

To Top