சினிமா
பிக்-பாஸ் பிரபலத்தின் தாய் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
சரத்குமார், லைலா, வடிவேலு ஆகியோர் நடிப்பில், கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கம்பீரம். இந்த படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த்.
மராத்தி நடிகையான இவர், இந்தி பிக்-பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை 3 முறை கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது தாயார் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
சமீபத்தில் இவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி, உயிரிழந்தார். இதனை அறிந்த சினிமா திரையுலகினர், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login