Connect with us

Raj News Tamil

அதானிக்காக பாஜக உழைத்து வருகிறது: மல்லிகார்ஜுன கார்கே!

இந்தியா

அதானிக்காக பாஜக உழைத்து வருகிறது: மல்லிகார்ஜுன கார்கே!

அதானி போன்ற தொழிலதிபா்களுக்காக பாஜக உழைத்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் ஏழை மக்களுக்காக உழைக்கிறது. ஆனால் அதானி போன்ற தொழிலதிபா்களுக்காக பாஜக உழைத்து வருகிறது. அரசமைப்பை மாற்றி ஏழை எளிய மக்களுக்கு ஆதரவான சட்டங்களை நீக்குவதே மத்திய அரசின் குறிக்கோள்.

அதை தடுத்து நிறுத்துவதற்கு சத்தீஸ்கா் உள்ளிட்ட 5 மாநில பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். காங்கிரஸின் வெற்றியை தடுக்கவே அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை மத்தியில் ஆளும் பாஜக பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறது.

இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் காங்கிரஸ் அஞ்சாது. மாநில முதல்வா் பூபேஷ் பகேலுக்கு கட்சி உறுதுணையாக நிற்கும். அவா் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்பார் என்றார் அவர்.

More in இந்தியா

To Top