Connect with us

Raj News Tamil

“யாரும் நம்பாதிங்க.. அது முழுக்க முழுக்க பொய்..” – அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர் போனி கபூர்!

சினிமா

“யாரும் நம்பாதிங்க.. அது முழுக்க முழுக்க பொய்..” – அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர் போனி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், இந்தியில் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். இந்தியில் ஹிட்டாகும் படங்களை தமிழிலும், தமிழில் ஹிட்டாகும் படங்களை இந்தியிலும், இவர் ரீமேக் செய்து வருகிறார்.

அந்த வகையில், அமிதாப் பச்சன் நடித்திருந்த பிங்க் என்ற படத்தை, தமிழில், நேர்கொண்ட பார்வை என்ற பெயரிலும், ஆர்டிகள் 15 என்ற இந்தி படத்தை, நெஞ்சுக்கு நீதி என்ற பெயரிலும் ரீமேக் செய்திருந்தார்.

இதையடுத்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த லவ் டுடே படத்தையும், இவர் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, பிரதீப் ரங்கநாதனே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், லவ் டுடே படத்திற்கான ரீமேக் உரிமை என்னிடம் இல்லை. இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்த தகவல் அனைத்தும் வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top