Connect with us

Raj News Tamil

தம்பி விஜய் தான் சூப்பர் ஸ்டார் சீமான் அதிரடி..!

சினிமா

தம்பி விஜய் தான் சூப்பர் ஸ்டார் சீமான் அதிரடி..!

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில், அண்மையில் வெளிவந்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே வேளையில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சலசலப்பு பேச்சுக்களும், அண்மைக்காலமாக வலம் வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தம்பி விஜய் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்.

வசூல் ரீதியாக இவருக்கு தான் அதிக வியாபாரம் நடக்கிறது என்றார். மேலும் தம்பி விஜய் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஏன் ஒரு தமிழர் சூப்பர் ஸ்டாராக வருவதை உங்களால் தாங்க முடியவில்லை என்றும் வினவினார். விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினியும் ஒப்புக் கொள்வார்,” என பேசினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top