சினிமா
கமலுக்காக கார்த்தியை கழட்டிவிட்ட பிரபலம்! ஜப்பான் படத்தில் இருந்து வெளியேற்றம்!
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கியுள்ளவர் இயக்குநர் ராஜூ முருகன். இவர், தற்போது கார்த்தியின் 25-வது படத்தை இயக்கி வருகிறார். ஜப்பான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில், ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரவிவர்மன், நடிகர் கமலுக்காக ஜப்பான் படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள், நடந்து வருகிறது.
அந்த படத்திற்கும் ரவிவர்மன் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். தற்போது, அப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதால், அங்கு பணியாற்றி அவர் சென்றுவிட்டாராம்.
எனவே, ஜப்பான் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை, சத்யன் சூரியன் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு, ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login