Connect with us

Raj News Tamil

110 நாட்கள் தொடர்ச்சியாக ஓடும் தனுஷ்!

சினிமா

110 நாட்கள் தொடர்ச்சியாக ஓடும் தனுஷ்!

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பல முகங்கள் கொண்ட தனுஷ், பா.பாண்டி படத்தின் மூலம், இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இந்த படத்திற்கு பிறகு, தற்போது தனது 50-வது படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.

எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், செல்வராகவன், அமலா பால், சந்தீப் கிஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், தனுஷ் மொட்டை அடித்து, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் ஷீட்டிங்கை தொடர்ந்து 110 நாட்கள் நடத்தியுள்ளாராம் தனுஷ்.

இடைவெளியின்றி ஷீட்டிங் நடத்தப்பட்டதால், இன்னும் சில நாட்களில், படத்தின் மொத்த ஷீட்டிங்கும் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த சினிமா தரப்பினர் அனைவரும், தனுஷின் திட்டமிடலை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். D50 படத்திற்கு பிறகு, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் படத்தில், தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top