Connect with us

Raj News Tamil

10 நாட்களில் அதிரடி வசூல் வேட்டையாடிய டிடி ரிட்டர்ன்ஸ்!

சினிமா

10 நாட்களில் அதிரடி வசூல் வேட்டையாடிய டிடி ரிட்டர்ன்ஸ்!

காமெடி கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த சந்தானம், திடீரென வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால், அந்த திரைப்படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததால், மீண்டும் காமெடி படங்களில் நடிக்க முடிவு செய்து, டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், நாட்கள் செல்ல செல்ல, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், படத்தின் வசூல் அமோகமாகஇருந்தது.

10 நாட்கள் முடிவில், இந்த திரைப்படம், ரூபாய் 25 கோடி வரை வசூலித்துள்ளது. இதுதான் சந்தானம் நடித்த திரைப்படங்களிலேயே, அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top