Connect with us

Raj News Tamil

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த தனுஷ்!

சினிமா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த தனுஷ்!

தனுஷ் இயக்கத்தில், துஷாரா விஜயன், விஷ்னு விஷால் ஆகியோர் நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் டி 50.

வடசென்னையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் தான், தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை, தனுஷ் வெளியிட்டுள்ளார். அதாவது, தனது இன்ஸ்டா பக்கத்தில், தனுஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தொடுவானம் மிக அருகில் உள்ளது என்றும், இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், குஷி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top