Connect with us

Raj News Tamil

மீண்டும் வெளியாகிறது தனுஷின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!!!

சினிமா

மீண்டும் வெளியாகிறது தனுஷின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!!!

தனுஷ் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் அமலா பால், சுரபி, சரண்யா, சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். தமிழில் கோடிகளை அள்ளிய இந்த படத்தை தெலுங்கில் ‘ரகுவரன் பி.டெக்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்தனர்.

தற்பொழுது இந்த படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரும் 18ம் தேதி மீண்டும் வெளியாகிறது. அண்மையில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தை தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்து வரவேற்பை பெற்ற நிலையில் தனுஷின் இந்தப் படத்தையும் அங்கு மீண்டும் திரையிடுகின்றனர்.

தெலுங்கில் தனுஷ் நேரடியாக “சார்”(வாத்தி) என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

More in சினிமா

To Top