Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா??…திமுக பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை

அரசியல்

மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா??…திமுக பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை

தென்காசி மாவட்டத்தில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பெண் சேர்மன் தமிழ்செல்வி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அரசியல் முன்விரோதம் காரணமாக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வி “மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம், அதற்கும் இங்கு நடப்பதற்கும் என்ன வித்தியாசம்?” என்று கோபத்துடன் மாவட்ட பெண் சேர்மன் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளர்கள், “மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?” என்று மிரட்டியதோடு சேலையை பிடித்து இழுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் நடந்த வன்கொடுமையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சொந்தக் கட்சியினரால் திமுக மாவட்ட பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை தொடர்புடைய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More in அரசியல்

To Top