Connect with us

Raj News Tamil

திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது: மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது: மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) உயர்ந்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

பெரும் பெருமிதத்துடன் தேசிய சராசரியை விஞ்சிய சராசரி. நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது. நமது அயராத முயற்சிகள், கடந்த இரு நிதியாண்டுகளில் 8 சதவீதம் எனும் சிறப்பான பொருளாதார வளா்ச்சி விகிதத்தை உறுதி செய்துள்ளது. இதன்மூலம், இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாகத் தமிழ்நாடு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நமது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடியாக உயா்ந்து, 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் என்னும் நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்று அந்த பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top