Connect with us

Raj News Tamil

இலங்கையில் நிலநடுக்கம்: திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை!

தமிழகம்

இலங்கையில் நிலநடுக்கம்: திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை!

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோமீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 எனப் பதிவாகியுள்ளது.

இதனால் இலங்கை தலைநகர் கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தூக்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் பக்தர்கள் யாரும் குளிக்காமல் இருக்க கடலோர குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More in தமிழகம்

To Top