Connect with us

Raj News Tamil

அமித்ஷாவிடம் வாழ்த்து பெற டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி..!

அரசியல்

அமித்ஷாவிடம் வாழ்த்து பெற டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 26ம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.

டெல்லி செல்லும் இபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும், இதற்கான நேரம் கேட்கப்பட்ட நிலையில் நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 27ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது, பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு அமித்ஷாவிடம் வாழ்த்து பெறுகிறார். மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டே உள்ளதால் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி நிலைபாடுகள் குறித்து பேசவும் வாய்ப்புள்ளது. மேலும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகளும் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top