Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பணிபுரியும் பெண்களுக்கு விடுதி!

தமிழகம்

பணிபுரியும் பெண்களுக்கு விடுதி!

தமிழக அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் 9 நகரங்களில் மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள் உள்ளதால் பல இளம் பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு நகரங்களுக்கு வேலைக்கு செல்ல ஆர்வம் கொள்கின்றனர். விலைவாசி உயர்வு மற்றும் அதிக வாடகை காரணமாக அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு, பணி நிமித்தம் புதிய இடங்களில் செலவுகளைக் சமாளிப்பது கடினம் ஆகும். இதுபோன்ற பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் மாதம் ரூ.25,000 மற்றும் பிற இடங்களில் ரூ 15,000 வரை சம்பளம் பெறும் பெண்கள் இந்த பணிபுரியும் பெண்கள் விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள். சென்னையில் மாதம் 300 ரூபாயும், மற்ற இடங்களில் 200 ரூபாயும் வாடகை செலுத்த வேண்டும். உணவு செலவுகள், மின்சாரம் மற்றும் பிற கட்டணங்களுக்கு பகிர்வு முறை பின்பற்றப்படுகிறது. ஊழியர்களின் சம்பளம் அரசால் வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம்.

94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம்.

www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களை காணலாம்.

More in தமிழகம்

To Top