Connect with us

Raj News Tamil

திமுக இளைஞரணி மாநாடு எப்போது? – திமுக தலைமை அறிவிப்பு!

அரசியல்

திமுக இளைஞரணி மாநாடு எப்போது? – திமுக தலைமை அறிவிப்பு!

கடந்த டிசம்பர் 17ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பால் டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனால், டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த கனமழை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதனால் தேதி குறிப்பிடப்படாமல் 2-வது முறையாக மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு, வருகிற 21-01-2024 அன்று சேலத்தில் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in அரசியல்

To Top