Connect with us

Raj News Tamil

பாம்பை வரதட்சணையாக கொடுத்தால் தான் கல்யாணம்!

இந்தியா

பாம்பை வரதட்சணையாக கொடுத்தால் தான் கல்யாணம்!

சத்தீஸ்கரில் ஒரு கிராமத்தில் பாம்பை வரதட்சணையாக வழங்குவதாக தெரியவந்துள்ளது.

வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

கி.மு. 200ஆம் ஆண்டில் மேற்கு ஐரோப்பாவில் உருவான வரதட்சனை என்ற பழக்கம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இல்லாமல் போனாலும் நமது தேசத்தில் தொடர்கிறது.

வரதட்சணை 1961 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சட்ட விரோதம் என்ற போதிலும் 95 சதவீத இந்திய திருமணங்களில் வரதட்சணை கொடுக்கப்படுவதாக உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கரில் ஒரு கிராமத்தில் வித்தியசமான முறையில் வரதட்சணை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

அங்கு பாரா பழங்குடியினர்கள் திருமணத்திற்காக விதவிதமான பாம்புகளை வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் பாம்பை வரதட்சணையாக கொடுக்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது என்றும் திருமணம் முழுமை அடையாது என்றும் கிராமவாசிகள் நம்புவதாக கூறப்படுகின்றது.

More in இந்தியா

To Top