Connect with us
Raj News Tamil

Raj News Tamil

இந்தியன் 2 வீடியோ.. சமூக வலைதளத்தில் வெளியிட்ட லைக்கா!

சினிமா

இந்தியன் 2 வீடியோ.. சமூக வலைதளத்தில் வெளியிட்ட லைக்கா!

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில், கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன்.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தின் ஷீட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவையும், லைக்கா நிறுவனம், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

More in சினிமா

To Top